காக்கா பிரியாணி பீதியில் கோவை-4 பேர் கைது
கோவை: கோவையில் சிக்கன் பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து வனத்துறையினர் காக்கா வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் உண்மையை ஒப்புகொண்ட அவர்கள் ஹோட்டல் முதலாளிகளையும் கைகாட்டி உள்ளனர்.
இதையடுத்து ஹோட்டல்களில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை மதுக்கரையில் உள்ள ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணிக்கு என்ற பெயரில் காக்கா பிரியாணி போடப்படுவதாகவும், இதற்காக சிலர் மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் வேட்டையாடி வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை ரேஞ்சர் சவுந்தரராஜன், பாரஸ்டர் பழனிச்சாமி, நடராஜன் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை அங்கு சென்று சோதனை நடத்தினர். காக்கை வேட்டையில் மும்முரமாக இருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்கள் தோள் உரித்து பிரியாணிக்கு தயாராக வைத்திருந்த 25 காகங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அந்த இடத்திலே குழி தோண்டி புதைத்தனர்.
வனத்துறையினரின் விசாரணையில் அவர்கள் சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்த முத்துமாலை (25), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி (20), கிருஷ்ணன் (60), உரிச்சான் (40) என கூறியுள்ளனர். காக்கைகளை வேட்டையாடி குறைந்த விலைக்கு அங்குள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்து வந்ததையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சில ஹோட்டல் உரிமையாளர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications