பெர்ணான்டசுக்கு சீட் தராதது சரியே - சொல்கிறார் மனைவி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் உடல்நிலை காரணம் காட்டி ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி முசாபர்பூர் தொகுதியில் சீட் ஒதுக்க மறுத்தது சரியான முடிவு தான் என அவரது மனைவி லைலா கபீர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத் யாதவ், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தேர்தலில் போட்டியிட மாட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முசாபர்பூர் தொகுதி ஒதுக்கப்படாது என அறிவித்தார்.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பையும், ஓயாத விமர்சனங்களையும் எழுப்பியது. பெர்னாண்டஸ் கட்சி முடிவை மீறி சுயேச்சையாகப் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சரத் யாதவ்வின் முடிவு சரி தான் என்கிறார் பெர்ணான்டசின் மனைவி லைலா கபிர் பெர்ணான்டஸ்.
தற்போது பெர்னாண்டஸை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வரும் அவர் கூறுகையி்ல்,
அனைவரும் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் மோசமான உடல்நிலை காரணமாக அவரை பரபரப்பான தேர்தல் வாழ்க்கைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என அவரது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தில் அவரது நடவடிக்கையை உற்று பார்த்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். அவருக்கு தன்னுடைய உடல் நிலையை பற்றி நன்கு தெரிந்திருந்தால் அவராகவே தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியிருப்பார்.
ஒரு சிறு குழந்தை தீயை தொட வேண்டும் என விரும்பினால் நாம் விட்டுவிட முடியுமா? அது போல தான் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications