வி.சிக்கு எதிர்ப்பு-மாணவர் காங்கிரசார் போராட்டம்
சென்னை: கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்பட்டது ஆகியவற்றை கண்டித்து கோவை மாணவர் காங்கிரசார் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மதியம் கோவையை சேர்ந்த மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் 75க்கும் மேற்பட்டவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும், விடுதலை சிறுத்தைகளை கூட்டணி சேர்க்க கூடாது என வலியுறுத்தியும் கோரிக்கை வைத்தனர். தலைமையகத்தின் வாசலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் தாமோதரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தலைவர் டெல்லி சென்றிருப்பதால் அவர் வந்தவுடன் இது குறித்து அவரிடம் பேசுவதாகவும் உறுதி அளித்தார்.
ஆனால் இதை ஏற்காத மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீண்டும் வாசலில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். மாணவர் காங்கிரஸ் கட்சியின் மாநில இணைசெயலாளர் கேஎஸ் பாபு கூறுகையில்,
தேர்தல் முடியும் வரை யாருடைய பதவியையும் பறிக்க கூடாது என்று அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கையில் மாநில தலைவருக்கே தெரியாமல், கோவையில் திட்டமிட்டு மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளன.
ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
ஏதோ வேகத்தில் பேசிவிட்டனர்...
இந்நிலையில் அங்கு வந்த மாணவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நவீன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெறச் செய்தார். நவீன் கூறுகையில்,
தேர்தல்பணிக்காக 3 பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கோவை நிர்வாகிகளை மாற்றி இருக்கிறார்கள். இது பற்றி நான் அகில இந்திய செயலாளரிடம் பேசி நல்ல முடிவை காண்பேன்.
விடுதலைச்சிறுத்தைகள் பற்றி ஏதோ வேகத்தில் மாணவர் காங்கிரசார் கருத்து தெரிவித்து விட்டனர். எங்களை பொறுத்தவரையில் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் படி, தமிழகத்தில் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications