பெண் போலீஸ் படுகொலை-தலை எங்கே?
சிவகங்கை: சிவகங்கை அருகே காதல் தகராறில் பெண் போலீஸ் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் மட்டும் கிடைத்துள்ளது. தலையைக் காணவில்லை. போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள கோவானூர் கிராமத்தில் கடந்த 11ம் தேதி ஒரு சாக்கு மூட்டை சிக்கியது. அதில் இளம் பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது தலை அதில் இல்லை.
இதையடுத்து போலீஸார் அந்த உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். தலையை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அந்தப் பெண் யார் என்று விசாரணை நடந்தது. அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பிணமாகக் கிடந்த பெண்ணின் பெயர் வேல் விழி. 27 வயதான அவர் திண்டுக்கல் மாவட்டம் எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்.
மதுரை ஆறாவது பட்டாலியன் ரிசர்வ் போலீஸில் உதவித் தலைமை ஏட்டாக இருந்து வந்தார். 10ம் தேதி முதலே அவரைக் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குணசேகரன் தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். 21ம் தேதிதான் அவர் புகார் கொடுத்துள்ளார்.
காதல் பிரச்சினை அல்லது குடும்பச் சண்டையில் வேல்வழி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேல்விழி குடும்பத்தினரை அவமானப்படுத்தும் நோக்கில்தான் பிணத்தை நிர்வாண கோலத்தில் போட்டு விட்டுச் சென்றுள்ளதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
வேல்விழியின் செல்போனைக் கைப்பற்றியுள்ள போலீஸார் அதில் பதிவாகியுள்ள எண்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் கொலை செய்து விட்டு, உடலை கோவனூரில் போட்டு விட்டுச் சென்றிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications