கணவனுக்கு திருட்டு பட்டம்- குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு
கோவை: கணவர் மீது திருட்டுப் பழி சுமத்தியதால் மனம் உடைந்த மனைவி தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் ஒரு குழந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (32). கார் மெக்கானிக்காக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி மாலதி (27). இவர்களுக்கு மதுமதி (2), நிதிஷ்குமார் (1)என்ற இரு குழந்தைகள் உள்ளது.
அன்னூர் பகுதியில் செந்தில்குமார் நின்று கொண்டிருந்த போது அங்கிருந்த பைக் ஒன்று காணாமல் போய்விட்டது. அதற்கு செந்தில்குமார் தான் காரணம் என்று சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்த அவரது மனைவி மாலதி மன உளைச்சல் காரணமாக வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகயாம் அடைந்த அவர்கள் மூவரையும் அக்கம் பக்கத்தினர், கோவை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை மதுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு குழந்தையும், தாயும் அபாய கட்டத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications