பாஜக கோவில் கட்டும் கம்பெனியல்ல..-நக்வி

விதியை மீறிய பாஜகவின் வாகனத்தை போலீசார் கைப்பற்றியதையடுத்து அங்கு பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பட்வாய் காவல் நிலையத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே அருகே பொதுக் கூட்டத்தில் பேசிய நக்வி, போலீசாரை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக கோவில் கட்டும் கம்பெனியல்ல..:
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நக்வி,
அயோத்தியில் கோவில் கட்டுவதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆனால், பிரச்சனையை இரு தரப்பும் பேசித் தீர்த்த பின்னரோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரோ அமைதியான முறையில் தான் அங்கு கோவில் கட்டப்படும். கோவிலைக் கட்டும் பொறுப்பு ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் வேலை. பாஜக கோவில் கட்டும் கம்பெனியல்ல என்றார்.
இதையடுத்து பாஜகவில் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
