நாளை உகாதி: கருணாநிதி, ஜெ. வாழ்த்து
சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட மொழி மக்களின் புத்தாண்டான உகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா விடுத்துள்ள செய்தியில்,
உகாதியை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றுமை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை ஏற்படுத்தி, நாட்டின் வளமைக்கும், செழிப்புக்கும், உகாதி வழிவகுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தெலுங்கு மொழி பேசும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கும் தேவையான வாய்ப்பு வசதிகள் அனைத்தையும் வழங்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தெலுங்கு மொழி பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் தெலுங்கு புத்தாண்டு பிறக்கும் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி தெலுங்கு மொழியையும் அம்மொழி பேசும் மக்களையும் அரசு பெருமைப்படுத்தியுள்ளது.
உகாதி திருநாளை கொண்டாடி மகிழும் தெலுங்கு மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும், நலமும், வலிவும், பொலிவும் சேரட்டும் என உளமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், புத்தாண்டு திருநாளாம் உகாதி திருநாளை விமரிசையாக கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரது வாழ்விலும் வளம் செழிக்கும் ஆண்டாக, நலம் தழைக்கும் ஆண்டாக, செல்வம் கொழிக்கும் ஆண்டாக, தொழில் வளம் சிறக்கும் ஆண்டாக, இந்த புத்தாண்டு விளங்கட்டும், வாழ்வில் புது வசந்தம் சேர்க்கட்டும்.
இந்தியாவில் விரைவில் நல்லாட்சி மலர அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டு, ஜனநாயக கடமைகளை ஆற்ற முன்வர வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்து யுகாதி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரியத்தை பேணிக்காக்கும் அதே சமயத்தில், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வின் அடிப்படையில் தமிழ் மக்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழக் கூடியவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள். அனைவரது வாழ் விலும் வளம் செழிக்கும் ஆண்டாக, நலம் தழைக்கும் ஆண்டாக, செல்வம் கொழிக்கும் ஆண்டாக, தொழில் வளம் சிறக்கும் ஆண்டாக, இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.
பூக்கட்டும் வாழ்வில் புது வசந்தம். அது சேர்க்கட்டும் இன்பம் ஆண்டு முழுவதும் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications