ஆலங்குளத்தில் கந்து வட்டி கொடுமை- மக்கள் அவதி
ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டி கொடுமையினால் ஏழை மற்றும் விவசாய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது பூலாங்குளம். சமீபகாலமாக இந்த ஊரில் கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருகிறது. இங்கு விவசாயம் மற்றும் கூலி வேலை செய்வோர் அதிகம் உள்ளனர்.
குடும்ப செலவிற்காக பிறரிடம் இவர்கள் சிறிதளவு பணம் வாங்குகின்றனர். கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்து வருகின்றனர்.
வீட்டு பத்திரம் மற்றும் நகை போன்றவற்றை அடமானமாக பெற்றுதான் இந்த கும்பல் கடன் கொடுக்கிறார்கள். சிறிய தொகையை கொடுத்து விட்டு நீங்கள் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து வீட்டு மதிப்பை விட அதிகமாகி விட்டது என்கிறார்கள்.
வீட்டை தருகிறாயா அல்லது பணத்தை கொடுக்கிறாயா என்று மக்களை மிரட்டி வருகின்றனர். பின்பு கந்து வட்டி கும்பல் வலுகட்டாயமாக கடன் வாங்கியவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி அதை தனக்கு சொந்தமாக்கி கொள்கிறது.
பூலாங்குளத்தில் இவ்வாறு கந்துவட்டி கும்பலிடம் வீ்ட்டை இழந்தவர்கள் பலர் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் கந்து வட்டி கும்பலுக்கு சொந்தமாகி உள்ளது. கந்து வட்டி கொடுமையால் 2பேர் தங்களது மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஊரை விட்டே வெளியேறி விட்டனர். பிள்ளைகள் திருமண வயதை எட்டிய நிலையில் இரு குடும்பங்களும் தவிக்கின்றன.
வெளியூர்களில் வந்து மிரட்டல் தோனியில் கந்து வட்டி வசூலிக்கும் இத்தகைய கும்பலின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். பூலாங்குளம் மட்டுமின்றி ஆலங்குளம் சுற்றுபுற பகுதிகளில் கந்து வட்டி கொடுமை தலைவிரித்தாடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications