சேலத்திலிருந்து வந்த ரூ.153 கோடி செல்லா நோட்டு!
சென்னை: ரூ.153 கோடி கிழிந்த, கறைபடிந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் மிக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.
செல்லாத நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நோட்டுகளின் எண்களை ரிசர்வ் வங்கி குறித்துக் கொண்டு அதை அழித்துவிடும். பின்னர் அந்த எண்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும்.
இந்த வகையில் சேலம் பகுதியில் உள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுக்கள் ரூ.153 கோடி அளவுக்குக் குவிந்தன. பல்வேறு வங்கிகள் இதனை சேலம் பகுதி ஸ்டேட் வங்கி தலைமையகத்தில் ஒப்படைத்திருந்தன.
இதை சென்னையில் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டன. இதற்காக அந்த ரயிலில் இரு தனி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
பி்ன்னர் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் அந்த நோட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நோட்டுகள் இயந்திரம் மூலம் கூழாக அரைக்கப்படும்.
முன்பு செல்லாத நோட்டுகளை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி எரித்து வந்தது. ஆனால் காற்று மாசுபடுவதாக புகார் எழுந்ததால் இப்போது அவை அரைக்கப்படுகின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications