நெல்லையில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே 7 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள கூட்டப்புளியை சேர்ந்தவர் டெனில். இவரது மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 7 வயது சிறுமியான ராணி அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று ராணி பள்ளிக்கு சென்றுவிட்டு அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் தனது அண்ணன் அஜயுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரை சேர்ந்த பெலி கான் என்பவன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து, ராணியை கடத்திச் சென்றான்.
ராணியின் அண்ணன் அஜய் தடுத்தும் நிற்காமல் சென்று விட்டான். நடந்த சம்பவத்தை அஜய் வீட்டில் கூறினான். உடனே ராணியின் பெற்றோரும், உறவினர்களும் அவளை தேடினர். அக்கம் பக்கத்தில் பல இடங்கலில் தேடியும் ராணி கிடைக்கவில்லை. இதனிடையே இரண்டு மணி நேரம் கழித்து வாலிபர் பெலி கான், ராணியை வீட்டுக்கு அருகே கொண்டு வந்துவிட்டு சென்றான்.
சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது வாலிபர் பெலி கான் அவளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுபற்றி ராணியின் தாய் ஜூலியட், பழவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெலி கானை தேடி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications