குடிநீர் கோரி தேர்தலை புறக்கணிக்க கிராமம் முடிவு!
சீர்காழி: நாகை மாவட்டம், சீர்காழி அருகே குடி நீருக்கு 2 கிலோ மீட்டர் செல்லும் அவலத்தை கண்டித்து திருநகரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது திருநகரி கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றி பொன்னன் பகுதி, ரெட்டக்குளம், வாய்க்கால்கரை, கன்னிகோயில், கோவில் பண்ணை, சூரை பனையடி போன்ற பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் குடிநீர் இல்லாமல் அவமதிப்படுகின்றனர். காரணம், இந்த பகுதிகளில் இறால் பண்ணைகள் அதிகம் உள்ளதால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளதாலும், நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்று விட்டதுமே காரணம்.
இதனால் குடி நீர் எடுக்க 2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அவலம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகின்றதாம்.
தங்களது குடி நீர் பிரச்சனையை தீர்க்ககோரி இப் பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ போன்ற பலரிடம் முறையாக மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இனால் வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications