இன்னும் ஒரு முடிவும் எடுக்கலே-கார்த்திக்

அரசியல் கூட்டணிகள் படு வேகமாக உருவாகி முடிந்து கொண்டிருக்கின்றன. கிடைத்த கட்சிகளை வைத்துக் கொண்டு அணிகளை உருவாக்கி பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன பெரிய கட்சிகள்.
திமுக அணி முடிவாகி விட்டது. அதிமுக அணியும் இன்று ஒரு வழியாக இறுதியாகி விட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேட்பாளர்களையே அறிவித்து விட்டார். பிரசாரத்தையும் தொடங்கி போய்க் கொண்டே இருக்கிறார்.
பாஜக தான் தனக்கென ஒரு அணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறுகிறது. கூடவே கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியும் இணையும் என்கிறார்கள்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், எங்களது நிலை குறித்து பத்திரிகைகளில் ஏதேதோ செய்திகள் வருகின்றன. ஆனால் நாங்கள் இன்னும் முடிவே எடுக்கவில்லை. 29ம் தேதி திருப்பூரில் எங்களது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளேன். அங்குதான் முடிவெடுப்போம். முடிவெடுத்ததும் ஏப்ரல் 1ம் தேதி நானே சென்னையில் கூட்டணி குறித்து அறிவிப்பேன். அன்றே தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.
14 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று கண்டறிந்துள்ளோம். அதில் 7 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மற்றவற்றில் பிறரின் வெற்றிகளை நாங்கள் நிர்ணயிக்கும் சக்தியுடன் உள்ளோம்.
திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருப்பூர், தேனி போன்ற தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளேன். அதில் ஏதாவது ஒன்றில் நான் போட்டியிடுவேன்.
பாஜகவுடன் பேசி வருவது உண்மைதான். ஆனால் அவர்கள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்றார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications