பெண் கற்பழித்து கொலை- நெல்லை திமுக பிரமுகர் கைது
நெல்லை: தோட்டத்தில் கிடந்த பிணத்தை ஆற்றில் தூக்கி போட்டு தடயத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்காக நெல்லை திமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அச்சம்புதூர் அருகில் கரிசல்குடியிருப்பு விலக்கு உள்ளது. இந்த இடத்துக்கு அருகில் அனுமன் நதி ஓடுகிறது. இதில் இளம் பெண்ணின் உயிரற்ற உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் விசாரணையை துவக்கினர். பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணை பலர் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
அதே சமயத்தில் அவர் கேரளாவை சேர்ந்த விபச்சார அழகியாக இருக்கலாம் என்றும், அதிக பணம் கேட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக போலீசார் அருகிலிருந்த தோப்பில் பிணத்தை எரித்ததற்கான சுவடுகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து தோப்பின் உரிமையாளர் சுப்பையா (70) என்பவரை விசாரி்த்தனர். அப்போது அவர் அந்த பிணம் தோப்பில் கிடந்தது என்றும், போலீஸ் விசாரணைக்கு பயந்து தன்து மகன் ராஜ் நாராயணன் (31), உறவினர்கள் பிச்சையா (39), அப்பகுதி திமுக செயலாளர் ராஜராஜன் (39) ஆகிய 4 பேரும் சேர்ந்து பிணத்தை ஆற்றில் தூக்கிப்போட்டதாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் தடயத்தை மறைக்க முயன்றதாக கூறி அந்த 4 பேரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். போலீசார் அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!











Click it and Unblock the Notifications