ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெ போட்ட திடீர் நிபந்தனை

அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.
பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.
ஜெ. போட்ட நிபந்தனை:
மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications