கைவிட்ட பாமக - நழுவிய தேமுதிக - அதிர்ச்சியில் காங். - தங்கபாலு டெல்லி பயணம்
சென்னை: அதிமுக கூட்டணிக்கு பாமக போய் விட்டதாலும், தேமுதிக பிடி கொடுக்காமல் நழுவி விட்டதாலும், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இதையடுத்து கட்சி மேலிடத்துடன் விவாதிப்பதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு டெல்லி சென்றுள்ளார்.
கடுமையாக முயற்சித்தும் கூட பாமகவையும், தேமுதிகவையும் திமுக கூட்டணிக்குக் கொண்டு வர முடியாமல் போனது காங்கிரஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விஜயகாந்த்தாவது நம்பிக்கை அளிப்பார் என்று பார்த்தால் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்து விட்டேன். 3 சீட் மட்டுமே ஒதுக்கப்படும் கட்சியெல்லாம் தேசியக் கட்சியா (பீகாரில் காங்கிரஸுக்கு 3 சீட் மட்டுமே தந்ததைக் குறிப்பிட்டு) என்று கன்னியாகுமரியில் தனது நிலையை தெளிவாக்கி விட்டார்.
இதனால் காங்கிரஸ் முகாம் கடும் குழப்பமடைந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில், திமுகவைத் தவிர்த்து பெரிய கட்சி என்று பார்த்தால் அது காங்கிரஸ் மட்டுமே. எனவே வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நினைத்து காங்கிரஸ் கட்சி பயந்து போயுள்ளது.
இந்த நிலையில், நேற்று அவசரமாக டெல்லி சென்றார் தங்கபாலு. நேற்று மாலை சென்ற அவர், சோனியா காந்தியிடம் கூட்டணி குறித்தும், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் பேசவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications