சேலம் தேமுதிக வேட்பாளர்-வாழப்பாடியின் சிஷ்யர்

தீவிர காங்கிரஸ்காரர் மோகன்ராஜ். வாழ்ப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் இணைந்து மோகன்ராஜும் வெளியேறினார்.
பின்னர் வாழப்பாடியார் ராஜீவ் காங்கிரஸைக் கலைத்து விட்டு திவாரி காங்கிரஸில் இணைந்தபோது மோகன்ராஜும் உடன் சென்றார். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது மோகன்ராஜும் அதில் இணைந்தார்.
55 வயதாகும் மோகன்ராஜ் அழகாபுரம் பஞ்சாயத்துத் தலைவராக 1986ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மோகன்ராஜின் குடும்பம் நீண்ட நெடிய அரசியல் பின்னணியைக் கொண்டது. இவரது சகோதரர் சுரேஷ்குமார். இவர் வேறு யாருமல்ல, சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆவார்.
சேலம் மாநகரில் மக்களை அவஸ்தைக்குள்ளாக்கும் கொசுத் தொல்லை உள்ளிட்டவற்றை ஒழிக்க பாடுபடுவேன் என்கிறார் மோகன்ராஜ்.
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டவுடனேயே மோகன்ராஜ் தனது பிரசாரத்தை அழகாபுரத்தில் தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications