கர்ப்பிணிகள், சிசு உள்பட 61 தமிழர்கள் கொடூரக் கொலை
மாத்தளன் கப்பல் வீதி, அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை இலங்கைப் படையினர் கொடும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதில், வலைஞர்மட பகுதியில், நடத்திய தாக்குதலில் துப்பாக்கிக் குண்டிலிருந்து பாய்ந்து சென்ற தோட்டா, கலைச்செல்வி என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை துளைத்துச் சென்றது. இதில் எட்டு மாத கர்ப்பிணியான படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் அநியாயமாக கொல்லப்பட்டது.
அதேபோல, 27 வயதுடைய 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான சோதிமலர் என்பவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய 9 மாத கர்ப்பிணிப் பெண்ணான க.பாசமலர் என்பவரின் வயிற்றைத் துளைத்த ரவை, அவரின் சிசுவின் தலையைத் தாக்கியுள்ளது.
இதனால், வயிற்றில் இருந்த அந்த சிசு உயிரிழந்து விட்டது. தற்போது ஆபத்தான நிலையில் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 3 கர்ப்பிணிப் பெண்கள் நிகழ்விடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழந்த, கருவுற்ற பெண்களின் உடல்களை புதைத்து அடக்கம் செய்தனர்.
சிறிலங்கா படையினரின் நேற்றைய தாக்குதல்களில் 15 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 40 சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.
நேற்றைய தாக்குதலில் மாத்தளன் பகுதியில்தான் அதிகளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் 17 சிறுவர்கள் உட்பட 46 பேர் கொலை:
முன்னதாக நேற்று முன் தினம் மாத்தளன், முள்ளி வாய்க்கால், வலைஞர் மடம் உள்ளிட்ட பாதுகாப்பு வலையப் பகுதிகளில் இலங்கை ராணுவம் சக்தி வாய்ந்த சிறிய ரக ஏவுகணைகளை வீசியது. இதை தொடர்ந்து அந்த பகுதியை பீரங்கி குண்டுகளால் துளைத்தது.
இதில் 17 சிறுவர்கள் உட்பட 46 அப்பாவி தமிழர்கள் பலியானார்கள். 96 பேர் படுகாயம் அடைந்தனர். மாத்தளன் மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனைவில் சிகிச்சை பெற்று தந்த 5 தமிழர்கள் பலியானார்கள்.
வலைஞர்மடத்தில் நடந்த தாக்குதலில் 32 வயதான அஜந்தா அபராஜிதன் என்கிற கிராம சேவையாளர் கொல்லப்பட்டார்
அங்கு செஞ்சிலுவை சங்கத்தினர் நோயாளிகளுக்காக சேகரித்து வைத்திருந்த மருந்து கிடங்கு ஒன்றும் முற்றிலுமாக அழித்து நாசம் செய்யப்பட்டது.
இதையடுத்து காயமைடந்த 96 பேர் உட்பட ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என 100க்கணக்கான தமிழர்கள் அப்பகுதியில் மருந்துக்குகூட வசதியின்றி அவதிப்படுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications