சென்னையில் 200 குடிநீர் தொட்டிகள் தீக்கிரை
சென்னை: சென்னையில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 200 மாநகராட்சி குடிநீர் தொட்டிகள் எரிந்து சாம்பலாயின.
இவை அனைத்தும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக வைக்கப்படவிருந்த பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகும்.
புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இந்த குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை திடீரென இங்கு தீவிபத்து ஏற்பட்டு. இதில் பிளாஸ்டிக் தொட்டிகள் அனைத்தும் தீக்கிரையாகி விட்டன.
கொழுந்து விட்டு எரிந்த தீயை 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேர்ந்து போராடி அணைத்தன. மொத்தம் 200 தொட்டிகள் எரிந்து உருகிப் போய் விட்டன.
இது சதிச் செயலா அல்லது தற்செயலான விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பேப்பர் மில்லில் தீ விபத்து!:
சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் உள்ள பேப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சிவகாசி அருகே உள்ளது சுக்கிரவார்பட்டி. இங்கு
ஸ்ரீபதி பேப்பர் போர்டு என்ற தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
இங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பேப்பர் கழிவுகள் குவில் குவியலாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லில் ஏற்பட்ட தீயை 6 தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி அணைத்தனர்.
தீயினால் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் நாசமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications