மதுரையி்ல் பெருமளவில் போலி வாக்காளர்களை சேர்க்க முயற்சி - நரேஷ் குப்தா
சென்னை: மதுரை லோக்சபா தொகுதியில் பெருமளவில் வெளித் தொகுதி வாக்காளர்களை போலியாக முயற்சிகள் நடைபெறுகின்றன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை தொகுதியில் மு.க.அழகிரி நிற்கலாம் என பேச்சு அடிபட்டு வரும் நிலையில், நரேஷ்குப்தாவின் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் பெருமளவில் போலி வாக்காளர்களைச் சேர்க்க மனுக்கள் வந்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன.
இதுகுறித்து விசாரிப்பதற்காக மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி கே. சத்யகோபால் நியமிக்கப்பட்டார்.
அவரது விசாரணையில் சில விண்ணப்பங்களில் வாக்காளர் குறித்த முக்கியத் தகவல்கள் விடுபட்டிருந்ததும், சிலர் உறவினர் முகவரியை அளித்திருந்ததும் தெரியவந்தது.
சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் சென்று விசாரித்தபோது, தாங்கள் விண்ணப்பிக்கவே இல்லை என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு சில விண்ணப்பங்களில் இருந்த முகவரிகளில் விண்ணப்பதாரர்கள் வசிக்கவில்லை என்றும் தெரியவந்தது.
வேறு தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மதுரைத் தொகுதியில் சேர்ப்பதற்கு நடந்த முயற்சியே இது.
மதுரையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கோரி வந்துள்ள விண்ணப்பங்களை ஆய்வுசெய்ய கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யகோபால் மீண்டும் மதுரை செல்கிறார்.
கடந்த 3 வாரங்களில், சென்னையில் 34 ஆயிரம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் புதிதாக 4 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் சென்னையிலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளோம்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் வேறு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளாரா என்று சரிபார்க்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகியவற்றை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், தேர்தல் அதிகாரிகள் தானாகப் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெறக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. எனவே, புதிய விண்ணப்பதாரர்களின் பெயர் தீவிர ஆய்வுக்குப் பின்னரே, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதில் அவசரம் காட்ட மாட்டோம் என்றார் நரேஷ் குப்தா.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications