டெல்லி சீக்கியர் படுகொலை - தப்புகிறார் ஜெகதீஷ் டைட்லர்?
டெல்லி: இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லர் மீதான இறுதி விசாரணையை சிபிஐ டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் டைட்லர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூடப்பட்ட உறையில் வைத்து இந்த விசாரணை அறிக்கையை பெருநகர மாஜிஸ்திரேட் ராம் லால் மீனாவிடம் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி இந்த அறிக்கையை டெல்லி கோர்ட் பிரித்துப் படிக்கவுள்ளது.
டெல்லி வன்முறைக்கு டைட்லரே காரணம் என்பது குற்றச்சாட்டாகும். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவரின் சாட்சியம் நம்பும்படி இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டைட்லருக்கு காங்கிரஸ் கட்சி வட கிழக்கு டெல்லி தொகுதியில் சீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்பவர் டைட்லருக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் முன்பு ஜஸ்பீர் சிங் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதில், 1984ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, தனது தொகுதியில் சீக்கியர்களைப் படுகொலை செய்யுமாறு டைட்லர் உத்தரவிட்டதாக கூறியிருந்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications