கஸாப்புக்கு பெண் வக்கீல்-கோர்ட் நியமனம்

அவரது பெயர் அஞ்சலி வாக்மரே. மகாராஷ்டிர சட்ட சேவை ஆணையத்தைச் சேர்ந்தவர். இவர் கஸாப்புக்காக ஆஜராகி வாதாடுவார்.
அஞ்சலி நியமனத்தை, மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி தஹிலியானி இன்று அறிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 6ம் தேதி ஆர்தர் சாலை சிறையில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் தொடங்கும் எனவும் இன்று நீதிபதி அறிவித்தார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிபதி தஹிலியானி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இது நடந்தது.
அப்போது ஆர்தர் சாலை சிறையில் உள்ள கஸாப்பிடம், வீடியோ கான்பரன்சிங் மூலம் வக்கீல் நியமனம் குறித்து நீதிபதி தெரிவித்தார்.
கஸாப்பிடம் அவர் கூறுகையில், உனக்காக வக்கீல் அஞ்சலி வாக்மரே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உனக்காக ஆஜராகி வாதாடுவார். இன்னொரு வக்கீலும் அவருக்குத் துணையாக நியமிக்கப்படுவார் என்றார்.
ஏப்ரல் 6ம் தேதி வாக்மரே, கஸாப்பை நேரில் சந்திக்கவுள்ளார். மேலும் போலீஸ் குற்றப்பத்திரிக்கையை கஸாப்புக்கு அவர் படித்துக் காட்டுவார்.
இன்றைய விசாரணையின்போது அஞ்சலி வாக்மரேவும் உடன் இருந்தார். அவரை, கஸாப்புக்கு நீதிபதி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அஞ்சலி நியமனத்தை தான் எதிர்க்கவில்லை என்று கஸாப் தெரிவித்தான். மேலும், தனக்கு படிக்க செய்தித் தாள்கள் தேவை என்றும் கஸாப் தெரிவித்தான்.
ஏப்ரல் 6ம் தேதி அக்கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதி பதிலளித்தார்.
இன்றைய விசாரணையின்போது இன்னொரு குற்றவாளியான அன்சாரியும் உடன் இருந்தான்.
அப்போது தனக்காக ஆஜராக வக்கீல்கள் சுதீப் பஸ்போலா, முபின் சோல்கர், ஹைதர் அலி மொமீன் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை தனது வக்கீலாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தான்.
இவர்களை நியமிக்க கோர்ட் மறுத்தால் தற்போது தனக்காக வாதாடும் இஜாஸ் நக்வியையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதாகவும் அவன் தெரிவித்தான்.
இன்னொரு குற்றவாளியான சபாபுதீன் தான் தொடர்ந்து இஜாஸ் நக்வியையே பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தான்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications