அதிமுக கூட்டணி-சிபிஐக்கு 3 தொகுதிகள் அறிவிப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமகவைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமகவுக்கான தொகுதிப் பங்கீட்டை ஜெயலலிதா முடித்தார். கூட்டணியில் சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு 7 சீட் தருவதாகவும், ராஜ்யசபா சீட் ஒன்று தரப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், பாமகவுக்கான தொகுதிகளையும் உடனடியாக அவர் அறிவித்தார்.
இருப்பினும் சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து நேற்று மாலை இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையை ஜெயலலிதாவே நடத்தினார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாலர் வரதராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் இறுதியில், சிபிஐக்கான தொகுதிகள் மட்டும் உடன்பாடாகின.
இரவு 9.15 மணிக்கு பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் வெளியே வந்தனர்.
3 தொகுதிகள் ...
பின்னர் ஜெயலலிதா, தா.பாண்டியன் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 3 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆகிய 3 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை குறித்து தா.பாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வேட்பாளர்கள் யார்-யார்? என்பதை விரைவில் அறிவிப்போம்.
எங்கள் அணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இந்த உடன்படிக்கை எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது.
3 மணி நேரம் ஏன் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கிறது அல்லவா? ஆகவே நிறைய நேரம் பேச வேண்டி இருந்தது என்றார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications