திமுக வேட்பாளர்களுக்கு ஏப்ரல் 2 to 6 நேர்காணல்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்களுக்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 2ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. எந்த கட்சிகள் எங்கும் போட்டியிடும் என்பது அறிவிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது மட்டுமே பாக்கி உள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.
தொகுதி வாரியாக நேர்காணல் நடைபெறும் நாள் குறித்து திமுக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பு:
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதியும், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூருக்கு ஏப்ரல் 3ம் தேதியும், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு ஏப்ரல் 4ம் தேதியும் நேர்காணல் நடக்கிறது.
ஏப்ரல் 5ம் தேதி அன்று நடக்கும் நேர்காணலில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, அரக்கோணம் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும், கடைசி நாளான ஏப்ரல் 6ம் தேதி திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications