அதிமுக-சிபிஎம் இழுபறி: ஜெவை சந்திக்கிறார் காரத்
சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக, மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்களிடையே இழுபறி நிலவி வந்ததையடுத்து இதில் சிபிஎம் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் தலையிட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுக தரும் தொகுதிகளை ஏற்றுக் கொள்வது என மார்க்சிஸட் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்றே பிரகாஷ் காரத் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதி உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவர் என்று தெரிகிறது.
ஒண்ணு கூடுதலாக கேட்கும் மார்க்சிஸ்ட்...
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனக்கு 4 தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்து வந்தது.
இந்திய கம்யூனிஸ்டை விட நாங்கள் பலமான கட்சி. கடந்த முறை கடைசி நேரத்தில் திமுக எங்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் தலா 2 சீட்களைத் தந்து பங்கீட்டை முடித்துவிட்டது. அதே நிலை இப்போதும் தொடர்வதை எங்களால் ஏற்க முடியாது.
எனவே இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு தருவதை விட ஒரு தொகுதியாவது எங்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட். அதாவது இந்திய கம்யூனிஸ்டுக்கு 3 தொகுதிகள் தரப்பட்டுள்ளதால் தனக்கு 4 தொகுதிகளைக் கேட்டது.
தங்களுக்கு திருப்பூர், மதுரை, கோவை, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளைக் கேட்டது மார்க்சிஸ்ட்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்டுக்கு தந்ததைப் போலவே 3 மட்டுமே தர முடியும் என்றது அதிமுக. இதனால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்தது.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை, நாகப்பட்டனம் தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் அவற்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கி விட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் தொகுதிகளை முடிவு செய்வதிலும் இழுபறி காணப்பட்டது.
''எதுவும் சொல்வதற்கு இல்லை''...
இந் நிலையில் நேற்று 2 மணி நேரம் பேசிவிட்டு இரவு பத்தே கால் மணியளவில் ஜெயலலிதா வீட்டிலிருந்து வெளியே வந்தார் மார்க்சிஸ்ட் தலைவர் வரதாஜன். அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பேச்சுவார்த்தை நடக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டுச் சென்று விட்டார்.
இந் நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று சென்னை வந்தார்.
தியாகராய நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாநிலச் செயலாளர் வரதராஜன், தலைவர்கள் ராமகிருஷ்ணன், சங்கரய்யா, டி.கே.ரங்கராஜன், உமாநாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்ளவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications