சென்னை: காங். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை: தமிழ்நாடு மாநில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தலைமறைவானது. இதில் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜெகநாதபுரத்தில் இருக்கிறது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூக்கி கொண்டிருந்தார்.
இந்நிலையில் இரவு சுமார் 2 மணிக்கு மர்ம கும்பல் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. பிரகாஷ் எப்போது பால்கனியில் தான் உறங்குவார் என்ற எண்ணத்தில் அவரை குறிவைத்து அந்த கும்பல் பால்கனியில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது.
அதில் பெட்ரோல் பால்கனி சுவர் மற்றும் தரையில் சிதறி வேகமாக பரவியது. அந்த அறை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் நன்றாக தூங்கி கொண்டிருந்த பிரகாஷ் சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டில் கருகிய வாசனை வருவதை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து பால்கனியை சென்று பார்த்த போது அந்த அறை தீப்பிடித்து எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுக்கு அடையாளமாக பாட்டில் சிதறல்கள் கிடப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து சேத்துப்பட்டு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சமயத்தில் வீட்டு பால்கனியில் யாரும் தூங்கவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் வேறு கட்சியினர் யாராவது இதில் ஈடுபட்டிருப்பார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications