யுஎஸ் மருத்துவமனையில் 8 பேர் சுட்டுகொலை
நியூயார்க்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிராம மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கார்தேஜ் என்ற கிராமம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் வசிக்கும் இந்த கிராமத்தில் பைன் லேக் மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனைக்கு துப்பாக்கியுடன் வந்த ராபர்ட் ஸ்டீவர்ட் என்ற 45 வயது நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சூட்டுள்ளார். இதில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். இரண்டு பேர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.
இவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவருக்கு 98 வயது. 4 பேருக்கு 80 வயது, இருவருக்கு 70 வயது. இவர்கள் 7 பேரும் சிகிச்சைக்கு வந்தவர்கள். இவர்களை தவிர்த்து பணியில் இருந்த நர்ஸ் ஒருவரும் பலியாகி உள்ளார். இவர்களுக்கும் அந்த கொலைகாரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடப்பதை கண்ட ஹெலன் ஆலிவ் என்ற நர்ஸ் அங்கிருந்த படுக்கை ஒன்றின் பின்னர் மறைந்து கொண்டு போலீசுக்கு போன் செய்துள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்த வந்த ஜஸ்டின் கார்னர் என்ற போலீஸ் அதிகார் கொலைகாரனை பிடிக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையில் துப்பாக்கி சூடு ஏற்பட்டது. அதில் போலீஸ் அதிகாரிக்கு லேசான காயமடைந்தார். கொலைகாரன் ராபர்ட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
யுஎஸ்சில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அங்கிருப்பவர்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications