தென்காசியை இழந்த அதிமுக தொண்டர்கள் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

-இசக்கிராஜன்

தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டு கொடுத்ததால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தொகுதியாகும்.

இத்தொகுதியில் 1951 முதல் 1991 வரை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 96ல் நடைபெற்ற தேர்தலில் தாமாகவும் வெற்றி பெற்றது.

பாஜகவோடு கூட்டணி அமைத்து அதிமுக முதன்முறையாக 1998ல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த நடந்த 1999ம் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது.

1984, 89 ஆகிய இரு தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூ போட்டியிட்டு தோல்வி அடைந்தது. அதன்பின் 2004ல் முதன்முறையாக தென்மாவட்டத்தில் இத்தொகுதியில் சிபிஐ போட்டியிட்டு அப்பாத்துரை வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்றதும் கடந்த எம்பிக்களை போல் நான் இருக்க மாட்டேன். மக்களுக்காக நாடாளுமன்றக் கூட்டம் போக வேறு நாட்களில் தொகுதியிலேயே வீடு எடுத்து தங்குவேன்.
மக்களின் பிரச்சனைக்காக போராடவும் தயங்கமாட்டேன் என்று கூறியவர் சில மாதம் மட்டுமே தொகுதியில் முழுமையாக வலம் வந்தார்.

பின் அலுவலகத்தை மட்டும் திறந்து வைத்துவிட்டு ஒரு உதவியாளரை நியமித்து விட்டு மாதத்திற்கு இருமுறை வந்து தொகுதிக்குள் ஏதாவது ஒரு விழாவில் கலந்து கொண்டு காணாமல் போவதை வாடிக்கையாகிவிட்டார்.

இவர் மீது தொகுதி மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்க தொடங்கினர். அதே சமயம் கட்சி பிரமுகர்கள், பொறுப்பாளர்கள் இவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை சரி செய்ய வலியுறுத்தினர். அதில் முன்னேற்றம் இல்லாததால் அவர்களும் எம்பியை விட்டு ஓதுங்க தொடங்கினர்.

மேலும் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மத்திய அரசு இவர் தொகுதிக்கு ஒதுக்கிய நிதிகளை தவிர வேறு எந்த நிதியையும் இவர் தொகுதிக்கு பெற்று தரவில்லை. மேலும் எம்பியை காணவில்லை என்று மக்களும், கட்சிகாரர்களும் போர்டு வைக்காத குறைதான்.

செங்கோட்டை, விகேபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு நலத்திட்ட பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்ரா. ஆனால் பின்னர் அதனை ரத்து செய்து விட்டார். அந்த பிரச்சனை இன்றும் தொகுதி முழுவதும் பரபரத்து கிடக்கிறது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் மீண்டும் தென்காசி தொகுதியை மீண்டும் இ.கம்யூக்கு ஒதுக்கியதை மறுபரீசிலனை செய்ய சீட் அதிமுக சார்பில் மனு செய்த 80 பேரும், மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

2 முறை அதிமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த தொகுதியை இ.கம்யூக்கு விட்டு கொடுத்துள்ளதால் அதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் எளிதாக காங்கிரசை தோற்கடித்து அதிமுக வெற்றி பெரும் தொகுதியை இ.கம்யூக்கு விட்டு கொடுத்துள்ளதை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் நேரடியாக அதிமுக போட்டியிட வேண்டும் என்றும் அதிமுகவினர் மனு அனுப்பிட தொடங்கியுள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் விபரம் வருமாறு

தென்காசி - திமுக
கடையநல்லூர் - இ.காங்
வாசுதேவந்ல்லூர் - மதிமுக
சங்கரன்கோவில் - அதி்முக
ராஜபாளையம் - அதிமுக
ஸ்ரீவில்லிபுத்தூர் - சிபிஎம்

மெஜாரிட்டி தொகுதிகள் அதிமுக அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சிபிஐ நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை மீது பொதுமக்கள் அடைந்துள்ள அதிருப்தி இந்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதே இப்போதைய நிலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+