மதுரையில் போட்டியிடுவது உறுதி - ஏப். 2ல் நேர்காணலில் அழகிரி பங்கேற்பு
மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மு.க.அழகிரி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் நேர்காணலில் அவர் பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் உள்ள 3 தொகுதிகள் மற்றும் மதுரை உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
இதில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிடுவது உறுதி. அதேபோல மதுரையில் மு.க.அழகிரியும், கன்னியாகுமரியில் அவரது மகள் கயல்விழியும் போட்டியிடுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
மு.க.அழகிரியை மதுரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரி அவருக்காக 140க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், மதுரை திமுகவினர் அழகிரிக்காக வாக்கு சேகரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். சுவர் விளம்பரங்களும் கூட செய்ய ஆரம்பித்து விட்டனர்.
மேலும், மதுரை சீட்டைக் கேட்டு திமுகவினர் யாரும் மனு செய்யவும் இல்லை. எனவே அழகிரி மதுரையில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதை உறுதிப்படுத்துவது போல ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் நேர்காணலுக்கு வருமாறு கூறி அழகிரிக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை அழகிரியே கூறியுள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற 2-ம் தேதி தலைமைக்கழகத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்துள்ளது. நான் செல்கிறேன். மதுரை தொகுதியில் யார் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி. இதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்வோம் என்றார் அழகிரி.
அழகிரியை கட்சி மேலிடம் நேர்காணலுக்கு அழைத்துள்ளதால், மதுரை திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். தொகுதி நமக்குத்தான் என்று குஷியாக கூறி வருகின்றனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications