காங். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசியவர் கைது
சென்னை: தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினர் பிரகாஷ் வீட்டில் குண்டுவீசயவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக இருப்பவர் பிரகாஷ். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீ்ட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தலைமறைவானது.
இதையடுத்து அவர் வீட்டு பால்கனி மற்றும் அறை முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து பிரகாஷ், சேத்துப்பட்டு போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து விசாரணை நடத்தினர்.
இதில் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சுகுமார், ரமேஷ் ஆகிய இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடினர்.
ஆனால், ரமேஷ் தலைமறைவாகி விட்டார். சுகுமாரை பிடித்த போலீசார் அவரை விசாரித்தனர்.
அப்போது சுகுமார் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில்,
ரமேஷ் எனது நண்பர். அவரது அண்ணன் ராஜேசை சமீபத்தில் ஒரு வழக்கில் பிரகாஷ் போலீசிடம் மாட்டிவிட்டார். இதனால் வருத்தம் அடைந்த ராஜேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் நன்றாக குடித்துவிட்டு அந்த பகுதியில் ரகளை செய்தார்.
அவரது திட்டத்தின் படி தான் நானும், ரமேசும், பிரகாஷ் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினோம். அவர்களை கொலை செய்ய நினைக்கவில்லை. பயமுறுத்துவதற்காக தான் அவ்வாறு செய்தோம் என்றார்.
இதையடுத்து சுகுமாரை கைது செய்த போலீசார். ரமேசை தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications