கஸாப் பெண் வக்கீலுக்கு 'Z' பாதுகாப்பு-மீண்டும் வாதாடுகிறார்

Subscribe to Oneindia Tamil

Anjali Waghmare
மும்பை: தீவிரவாதி கஸாப்புக்கு ஆதரவாக வாதாட முன் வந்த வக்கீல் அஞ்சலி வாக்மேரின் வீட்டில் கல்வீச்சு நடத்தப்பட்டதை அடுத்து அவர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது போலீஸ் அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து மீண்டும் வாதாட இருக்கிறார்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கஸாப்புக்காக வாதாட புனேவைச் சேர்ந்த வக்கீல் அஞ்சலி வாக்மேரை மும்பை கோர்ட் நியமித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அஞ்சலியின் வீட்டை சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் சிவசேனாவை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் இந்த வழக்கில் வாதாட விரும்பவில்லை. விலகி கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஆனால், அவர் இந்த வழக்கில் தொடர்ந்து வாதாட வேண்டும் என போலீசார் அதிகாரிகளும், சில சட்ட அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து அஞ்சலி நேற்று சிறப்பு நீதிபதி தகிலியானியை சந்தித்து பேசியுள்ளார். அதில், தான் அதிக நெருக்கடியில் இருப்பதாகவும், இவ்விஷயத்தில் முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் தரும்படியும் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மும்பை போலீசார் 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அவர் வீட்டை சுற்றி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று காலை கஸாப் வழக்கில் தொடர்ந்து வாதாட போவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் இரண்டாவது வக்கீலாக பங்கேற்க கேபி பவார் என்பவர் இன்று மாலை விருப்ப மனு செய்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+