தமிழகம்-தேர்தல் கண்காணிப்பில் 116 பார்வையாளர்கள்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணியில் 116 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 9 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.
தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 116 பார்வையாளர்கள் நியமிக்கப்படுகினறனர்.
அனைவருமே இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய் பணி, இந்திய வனப்பணி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆவர்.
ஒரு லோக்சபா தொகுதிக்கு 3 பேர் (2 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒருவர்) என்ற வீதத்தில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அந்த வகையில், சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கும் 9 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
நீலகிரி தொகுதிக்கு மட்டும் 2 தேர்தல் பார்வையாளர்கள் இருப்பார்கள்.
வட சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் சுனில் குமார் சிங்கும், கொளத்தூர், திரு.வி.க.நகருக்கு சுக்லாவும், பெரம்பூர், ராயபுரத்தில் பாலியும் தேர்தல் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
தென் சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகளில் அஞ்சலி பிரசாத்தும், சைதாப்பேட்டை, மயிலாப்பூருக்கு சத்தியவாசனும், தி.நகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு மிகிர் குமாரும் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
மத்திய சென்னை லோக்சபா தொகுதியின் கீழ் வரும் எழும்பூர், ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதிகளில் வீனா கனேகரும், வில்லிவாக்கம், அண்ணா நகரில் சிவக்குமாரும், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில் அபையல் தயாளும் பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications