திமுகவுக்கு திராவிடர் கழகம் ஆதரவு-வீரமணி
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிடர் கழகம், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கும் என அதன் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
மத்தியில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தந்துள்ளது. இதில் நாட்டுக்கு பல நலன்கள் மற்றும் வளங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராட்டும் செயல்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வதன் மூலம் நாட்டை பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்லப்படும். இதற்கான வாய்ப்பினை தமிழக வாக்காளர்கள் உருவாக்கி தர வேண்டும்.
திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யும். களப்பணிகளை மேற்கொள்ளும். தமிழக மற்றும் மத்திய அரசின் சாதனைகளையும் விளக்கும் புத்தகம் ஒன்றை திராவிடர் கழகம் வெளியிடும்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். தமிழ் ஈழம் மலருவதை கண்டு மகிழும் முதல் ஆளாக இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.
வரும் 7ம் தேதி திருச்சியில் திராவிட கழக பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் வீரமணி.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications