புதுவை சிறையில் சீமானை சந்தித்தார் ராமதாஸ்
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் சீமானை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்று சந்தித்துப் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மாலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதுச்சேரி சிறைக்கு வந்தார். உள்ளே சென்று சீமானை சந்தித்துப் பேசினார்.
அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் பாமக எம்.எல்ஏக்களும் வந்திருந்தனர்.
பின்னர் வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழிவாங்கும் நடவடிக்கையாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் என்ன செய்தார். அவர் செய்த ஒரே குற்றம் தென்திசையிலே ஒரு இனம் அழிக்கப்படுகிறது. இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார் என்பதுதான்.
தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு ஒட்டு மொத்த சினிமாத்துறை கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த செயலை கண்டித்துக் கொண்டு இருக்கிறார்கள். இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான் என்றார் ராமதாஸ்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications