தேயிலை தோட்ட தொழிலாளர் பேச்சுவார்த்தையில் சமரசம்
வால்பாறை: தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் நடந்து வந்த சம்பள பேச்சுவார்த்தை சுமூக முடிவுக்கு வந்துள்ளது. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 115.60 முடிவு செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை, ஆனைமலை உள்பட கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 45 ஆயிரம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் சமீபகாலமாக சம்பளம் உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் மாரிமுத்து, கோவை தங்கம் எம்எல்ஏ, திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த வி.பி.சிங்காரவேலு, அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை அமீது மற்றும் தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் திவாரி ராம்குமார், பாலச்சந்தர், அஸ்வின், செரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி முதல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.115.60 பைசா வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் தினக்கூலியில் ரூ.140க்கு முழு பண பயன்களும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தொழிற்சங்கத்தினரும், தோட்ட அதிபர்கள் சங்கத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications