தமிழகத்தில் 2 கிளைகள் திறக்கும் அரேவா
Subscribe to Oneindia Tamil
மும்பை: அரேவா டி அன்ட் டி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் ஓசூர், படப்பை உள்பட இந்தியாவில் மொத்தம் எட்டு புதிய தொழிற்சாலைகளை நிறுவவுள்ளது.
தமிழகத்தில் அமையும் இரு கிளைகள் மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் அமையவிருப்பவை கிரீன்பீல்ட் தொழிற்சாலைகளாக இருக்கும்.
மொத்தம் ரூ. 950 கோடி செலவில் இந்த எட்டு தொழிற்சாலைகளும் அமைகின்றன.
புதிய கிரீன்பீல்ட் தொழிற்சாலைக் கூடங்களில் வதோதராவில் நான்கும், படப்பையில் மூன்றும், ஓசூரில் ஒரு தொழிற்கூடமும் அமையும்.
ஓசூர், வதோதராவில் வர்த்தக தயாரிப்பு ஆரம்பித்து விட்டது. படப்பையில் சோதனை உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு ஜூன் மாதம் முதல் வர்த்தக ரீதியில் உற்பத்தி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications