23 தமிழக மீனவர்களைக் கடத்தி இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் கடத்திச் சென்று விட்டது இலங்கைக் கடற்படை. இதனால் ராமேஸ்வரம் பகுதியில், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரத்தை சேர்ந்த மாரியப்பன், கருணாமூர்த்தி, உள்பட 23 மீனவர்கள் நேற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை நோக்கி 5 அதிநவீன படகுகளில் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி சுட்டபடி தமிழக மீனவர்களின் 6 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் 6 படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை துப்பாக்கி முனையில் இலங்கை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ஊர்க்காவல் படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலில் வைத்தனர்.
தப்பித்துக் கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இதுகுறித்து ஊருக்குள் தெரிவித்தனர். இதையடுத்து மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட மீனவர்களை உடனடியாக மீ்ட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications