இன்றுடன் முடிகிறது திமுக நேர்காணல்..இன்றே வேட்பாளர் பட்டியல்?

Subscribe to Oneindia Tamil

DMK Interview
சென்னை: நேற்று தொடங்கிய திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றும் விறுவிறுப்புடன் நடந்தது. இரவிலேயே வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தனது நேர்காணலை நாளை நடத்துகிறது.

தலைநகர் சென்னையில் நேர்காணல் காலம் இது. அனைத்து முக்கிய கட்சிகளும் நேர்காணல்களை நடத்துவதிலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும், விருப்ப மனுக்களைப் பெறுவதிலும் படு பிசியாக உள்ளன.

திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. காலையில் தொடங்கிய நேர்காணல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

மத்திய சென்னை, கரூர், பெரம்பலூர், அரக்கோணம், திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு நேற்று நேர்காணல் நடந்தது.

இன்று மீதமுள்ள வடசென்னை, தென்சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, நாகப்பட்டினம், (தனி), தஞ்சாவூர் ஆகிய 11 தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.

இதில் நீலகிரி, பொள்ளாச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை தொகுதிகளுக்கு மனு செய்தவர்களிடம் காலையில் நேர்காணல் நடந்தது. மற்ற தொகுதிகளுக்கு மாலையில் தொடங்கியது.

பெண்களுக்கு அதிக வாய்ப்பு..

திமுகவில் இம்முறை பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதேபோல புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மதுரையில் அழகிரி அல்லது கனிமொழி அல்லது கயல்விழி, தென் சென்னை அல்லது ராமநாதபுரத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன், கன்னியாகுமரியில் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரில் நிற்கிறார். மத்திய அமைச்சர் ராசாவுக்கு நீலகிரி தப்படுகிறது.

திருவண்ணாமலையில் பாமகவின் காடுவெட்டி குருவை எதிர்த்து செஞ்சி ராமச்சந்திரன், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த ஜெகத்ரட்சகன் அரக்கோணத்தில் பாமகவின் வேலுவை எதிர்த்தும் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் சிலருக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்பில்லை.

இன்று இரவு முதல் பட்டியலோ அல்லது முழுப் பட்டியலையோ திமுக தலைமை வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+