சிறையில் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி
கடலூர்: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலி சாமியார் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விராலிமலை அருகே எடமலைப்பெட்டியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த பல இளம் பெண்களை கற்பழித்து, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 1997ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் தனக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் கண்புரை நோய் நீக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிறையில் அவருக்கு திடீரென் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறை துறை அதிகாரிகளிடம் இதை தெரிவித்துள்ளார்.
இதையடு்த்து போலீசார் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications