காங்கிரஸ்-டிக்கெட் கேட்டு ஆயிரக்கணக்கில் மனுக்கள்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு செய்துள்ளனராம்.
தமிழகத்தில் 15 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் காஞ்சீபுரம் (தனி), ஆரணி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி (தனி), நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
கடந்த முறை புதுவையை பாமகவிடம் இழந்த காங்கிரஸ் இம்முறை திமுக கூட்டணியில் அதை வாங்கியுள்ளது.
தமிழக காங்கிரஸாரிடம் கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. போட்டி போட்டுக் கொண்டு ஏகப்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
அல்வா கொடுத்த நிர்வாகிகள்..
நெல்லை தொகுதிக்கு விருப்ப மனு கொடுக்க வந்த நிர்வாகிகள் மனுவுடன் கூடவே அல்வாவையும் கொடுத்துள்ளனர்.
ஆனால் விருப்ப மனுக்களைப் பெற்றவர்கள், அல்வாவை மட்டும் தயவு செய்து வேண்டாமே என்று மறுத்து விட்டனராம்.
நெல்லை தொகுதியில் தனுஷ்கோடி ஆதித்தன் எம்.பி. போட்டியிட விருப்பம் தெரிவித்து நெல்லை சாமி என்பவர் விண்ணப்பித்தார்.
புக் கொடுத்த டைகர் சம்சுதீன்...
விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் டைகர் சம்சுதீன், தனது 28 ஆண்டு கால அரசியல் வரலாற்றை விளக்கி, 700 பக்க சாதனைப் புத்தகத்தை அச்சடித்து, அதை விருப்ப மனுவுடன் இணைத்து விண்ணப்பித்துள்ளாராம்.
பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிட செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் தலைமையில் மகளிரணியினர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனத்தை சந்தித்து வலியுறுத்தினர்.
திருச்சி தொகுதிக்கு சாருபாலா தொண்டைமான் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவர்கள் மனுசெய்தனர்.
வாங்கப்பட்ட மனுக்களை அப்படியே கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாகவும், அங்கு வைத்து பரிசீலித்து, வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதாகவும் மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications