சென்னை: பிளாட் விலையை மேலும் குறைத்த டிஎல்எப்!

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் கார்டன் சிட்டி எனும் பெயரில் 3000-க்கும் மேற்பட்ட ஃபிளாட்டுகளைக் கட்டி வருகிறது முன்னணி தனியார் வீட்டு வசதி நிறுவனமான டிஎல்எப்.
இவற்றின் விலை சதுர அடிக்கு ரூ.3000-க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளுக்கு பணம் செலுத்தப்பட்ட நிலையில், பொருளாதார வீழ்ச்சி காரணமான ரியல் எஸ்டேட் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால், டிஎல்எப்பில் வீடு வாங்கிய பலர் வேலை இழந்து தவித்தனர். இன்னும் சிலரோ, வீட்டின் விலையைக் குறைக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.
எனவே, பணத்தைத் திரும்பக் கேட்ட அனைவருக்கும் பணம் கொடுக்க முடிவு செய்துவிட்ட டிஎல்எப், இப்போது அவர்களுக்கு காசோலைகளை அனுப்பி வருகிறது. மேலும் சென்னை புராஜக்டில் ஃபிளாட்டுகளின் விலையை 20 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்தது.
இப்போது சதுர அடிக்கு மேலும் ரூ.200 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது டிஎல்எப். சரியான நேரத்தில் தவணையை தவறாமல் கட்டியவர்களுக்கு மட்டும் இந்தச் சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள டிஎல்எப் வீட்டு வசதித் திட்டத்திலும் 30 முதல் 40 சதவிகிதம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications