பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்கள் மத்தியில் பிரபாகரன்: ராணுவம்
கொழும்பு: மக்கள் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் புகுந்திருப்பதாக ராணுவம் கூறுகிறது. இதையடுத்து அப்பாவி மக்கள் உள்ள பகுதிகளில் அது குண்டு வீசித் தாக்கி வருகிறது.
புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்த கடும் சண்டையில் 400க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாகவும், புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாகவும் ராணுவம் நேற்று கூறியது. இருப்பினும் உண்மையிலேயே புதுக்குடியிருப்பு முழுமையாக ராணுவம் வசம் வந்து விட்டதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதற்கு முன்பும் கூட சில முறை புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்துத. ஆனால் அப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், புதுக்குடியிருப்பு கிழக்குப்பகுதியில் தான் பிரபாகரனின் தங்குமிடம் உள்ளது. சிங்கள ராணுவத்தின் 2 படை அணிகள் ஒருங்கிணைந்து வருவதை தெரிந்து கொண்ட பிரபாகரன் கடைசி நிமிடத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
போவதற்கு முன் அவர் தன் கார்களை தீ வைத்து அழித்து விட்டதாகவும், புகைப்படம், பிறப்புச்சான்றிதழ், ஜாதகம் போன்றவற்றை ஒரு மூட்டையில் கட்டி புதைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
பிரபாகரன் தற்போது மக்கள் பாதுகாப்பு வளையம் பகுதியில் இருப்பதாக சிங்கள ராணுவம் சந்தேகிக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பல்வன் பொக்கணை, இடைக்காடு, மாத்தாளன், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகள் மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிகளாக உள்ளன.
92 பேர் பரிதாப பலி
மிகவும் குறுகிய பரப்பளவு கொண்ட இப்பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தப் பகுதியில் நேற்று ராணுவம் கடுமையான வான் எறி குண்டு வீச்சை நடத்தியது.
இந்த கொடும் தாக்குதலில் 30 சிறுவர்கள் உள்பட 92 பேர் பலியானார்கள். பிரபாகரனை குறி வைத்து இன்றும் போர் நிறுத்த பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் பாதுகாப்பு பகுதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரபாகரன் மகன் சார்லசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த பகுதி மீதும் ஏவுகணைகளை சிங்கள ராணுவம் இடைவிடாமல் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறி விட்டு, மக்கள் திரண்ட பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அப்பாவி மக்கள் உயிரிழப்பது அதிகரித்தபடி உள்ளது.
மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிகளில் சுமார் 3 லட்சம் பேர் சிக்கி உள்ளதாக ஐ.நா. சபை மதிப்பிட்டுள்ளது.
தற்போது இந்தப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் தாக்குதலை நடத்த ராணுவம் திட்டமிட்டு வருவதால் மிகப் பெரிய உயிர்ப் படுகொலை நடக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ராணுவம் இந்தப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான தமிழர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications