வீட்டில் கம்ப்யூட்டர் வெடித்து டிசிஎஸ் ஊழியர் பலி?
சென்னை: வீட்டில் இருந்த தனது கம்ப்யூட்டர் வெடித்ததில் சென்னை டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வினோதமான இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த விஜயகுமார் (28) சென்னையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து வேளாச்சேரியில் உள்ள தெலுங்கு பிராமணர் தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் கம்ப்யூட்டரி்ல் வேலை பார்த்து கொண்டிருந்த போது, கம்ப்யூட்டர் திடீரென்று வெடித்ததை அடுத்து உட்கார்ந்த நிலையில் உடல் கருகி இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது விஜயகுமாருடன் அவரது நண்பர் ராம் பிரசாத் என்பவர் இருந்துள்ளார்.
வீட்டில் குளித்து கொண்டிருந்த திடீரென்று ஏதோ வெடி சத்தம் கேட்டது. வந்து பார்க்கையில் கம்ப்யூட்டர் முழுவதுமாக எரிந்து போயிருந்தது. விஜயகுமார் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்ததார் என ராம்பிரசாத் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
இது விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications