3 லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - மு.க.அழகிரி
மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். மதுரை தொகுதியில் நான் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி நேற்று சென்னையிலிருந்து மதுரை திரும்பினார்.
விமான நிலையத்தில் அழகிரிக்கு திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது, தேர்தல் வியூகம் குறித்து கட்சிப் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். தென்மாவட்டங்கள் முழுவதும் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
பல தேர்தல்களில் வெற்றி பெற்ற அனுபவம் உள்ளது. எனவே மதுரையில் குறைந்தது 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.
மதுரை தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்தால், எனது வாழ்நாளையே இந்த தொகுதிக்கு ஒப்படைப்பேன். தொகுதி முழுவதும் உள்ள குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வேன் என்றார் அழகிரி.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications