திருமண ஜோடியிடம் லஞ்சம்-பதிவாளர் கைது
பரமக்குடி: காதல் ஜோடியிடம் திருமணத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்ட சார்வதிபாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செயதனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் சுரேஷ் (23). இவரும் பரமக்குடி அருகே இருக்கும் மஞ்சள்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் ஹேமலதாவும், அங்குள்ள மாலை நேர கல்லூரியில் பிஏ படித்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இந்த காதல் ஜோடி மதுரைக்கு சென்று கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டது. தங்களது திருமணத்தை பதிவு செய்ய சத்திரக்குடி அருகே இருக்கும் போகலூர் சார்பதிவாளர் அலுவவகத்தில் பதிவு செய்ய சென்றது.
இவர்களது திருமணத்தை முதலில் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் பின்னர் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து காதல் ஜோடி ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
அவர்களின் ஆலோசனைப்படி சுரேஷ், ஹேமலதா காதல் ஜோடி ரசாயன பொடி தடவிய மூன்று 1000 ரூபாய் தாள்களுடன் பத்திரபதிவு அலுவலகத்துக்கு வந்தது.
சார்பதிவாளரை சந்தித்து பணம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை வாங்கி கொண்டு திருமணத்தை பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டது. பணத்தை வாங்கி கொண்ட சார்பதிவாளர், திருமணத்தை பதிவு செய்து கொடுத்தார்.
இந்நிலையில் அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து, சார்பதிவாளரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications