சத்யம் மோசடி குற்றப்பத்திரிகை தாக்கல்; நிரூபணமானால் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மீது செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வந்த ராமலிங்க ராஜு மீது பல்வேறு பிரிவுகள் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் செக்ஷன் 427ன்படி அவருக்கு ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படலாம். மதிப்புமிக்க உயில் அல்லது ஆவணங்களை மோசடி செய்த குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனை இது.
இந்த குற்றப்பத்திரிகையில் ராஜுவைத் தவிர, அவரது தம்பி ராமராஜு, சத்யம் முன்னாள் சிஎப்ஓ வாட்லாமணி, சத்யம் நிறுவன கணக்குகளை தணிக்கை செய்த பிரைஸ்வாட்டர்கூப்பர் ஹவுஸ் நிறுவனத்தின் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் தல்லூரி சீனிவாஸ் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட டி வெங்கடபதி ராஜி மற்றும் ஸ்ரீசைலம் ஆகியோரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளனர்.
ராஜூவின் இன்னொரு சகோதரர் சூர்யநாராயண ராஜுவை ஒன்பதாவது குற்றவாளியாக இதில் சேர்த்துள்ளது சிபிஐ.
இவரைத் தவிர மற்ற எட்டு பேரும் சஞ்சலகுடா சிறையில் உள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்காக 1500 முக்கிய ஆவணங்கள், 65000 பக்க இதர ஆவணங்கள் மற்றும் 432 சாட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தது சிபிஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications