சமாதான முயற்சி-ஜெ தூதராக வைகோவுடன் தா.பாண்டியன் சந்திப்பு

முதலில் 2 தொகுதி தான் என்று ஆரம்பித்து வைகோ முறைப்பு காட்டியபின் அதை 3 பின்னர் 4 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா. ஆனால், 5 தொகுதிகள் வேண்டும் என்று கூறிவிட்டார் வைகோ.
இதையடு்த்து விருதுநகர் மற்றும் மதிமுகவுக்கு பலமில்லாத 4 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. இதை வைகோ ஏற்கவில்லை
இதனால் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது. தனித்துப் போட்டியிடும் முடிவுக்கும் வைகோ வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று வைகோவுக்கு போயஸ் கார்டனில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால், தான் சொன்ன தொகுதிகளைத் தருவதாக பேகஸ் அனுப்புங்கள் வருகிறேன் என்று கூறிவிட்டார் வைகோ.
இதையடுத்து ஜெயலலிதா, சகிகலாவின் வேண்டுதலின்பேரில் அவரை சந்தித்தார் தா.பாண்டியன். சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.
அப்போது கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுமாறு வைகோவுக்கு தா.பா. அட்வைஸ் செய்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் வைகோ கோரும் தொகுதிகளைப் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் கூறியதாகத் தெரிகிறது.
(தா.பாண்டியன் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தனக்கு வேண்டிய தொகுதிகளை அந்த ரூட்டிலேயே போய் வாங்கிக் கொண்டுவிட்டார்)
வைகோவுடனான சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாண்டியன், மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்தேன். விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தேன் என்றார்.
ஆனால், வைகோ நிருபர்களை சந்திக்கவில்லை.
தா.பா போட்டி?:
இதற்கிடையே வட சென்னையில் தா.பாண்டியன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இந்தத் தொகுதியில் இருமுறை வென்றுள்ள பாண்டியனுக்கு தொகுதி அத்துப்படி.
தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் இடதுசாரிகளுக்கு எப்போதுமே பலமுண்டு. இதனால் தான் இங்கு திமுக வழக்கமாக தனது தொழிலாளர் சங்கத்தின் தலைவரான குப்புசாமியை நிறுத்தும். ஆனால் இப்போது உடல் நலமில்லாமல் இருப்பதால் குப்புசாமிக்கு பதில் டி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்தியுள்ளது.
இளங்கோவனுக்கு தொகுதியும் புதிது தேர்தல் அரசியலும் புதிது. தா.பாண்டியனை சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications