செளதி தூதரகம்-ஏர் இந்தியாவுக்கு அல்-கொய்தா குறி

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் மும்பையில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை நிறைவேற்ற தீவிரவாதிகள் தயாராகி வருவதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் மும்பையில் கபே பரேடே பகுதியில் மேக் டவரின் நான்காவது மாடியில் இருக்கும் சவுதி தூதரகத்தை தகர்க்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும், தீவிரவாதிகள் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதை செய்ய போவது அல் கொய்தா என உளவு துறை கூறியிருப்பதால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த தாக்குதல்களை நடத்தினால் இந்தியாவுக்கு அதிக நெருக்கடி ஏற்படுத்த முடியும் என அல் கொய்தா கருதுகிறது.
இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாதுகாப்பை அதிகரிக்கும்படி எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது. எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கூறப்பட்டுள்ளோம். சவுதி அரேபியாவின் துணை தூதரகத்துக்கு மட்டுமல்ல சவுதியிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுத்து வருகிறோம்.
அதேசமயத்தில் சவுதியில் இருந்து வரும் விமானங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளும் மிரட்டல் விடுத்து வருவதாக உளவுத் துறை கூறி வருகிறது. என்றாலும் இவர்கள் அனைவரையும் விட அல் கொய்தா தீவிரவாதிகள் மோசமானவர்கள்.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் போல் விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்தலாம் என்பதால் மும்பை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
ஏர் இந்தியாவுக்கு மிரட்டல் இமெயில்...
இந்நிலையில் நேற்று மும்பை ஏர் இந்தியா விமான அலுவலகத்துக்கு ஒரு இமெயில் வந்தது. அதில் அந்த அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த இ-மெயில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். கடந்த இரண்டு வாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இது மூன்றாவது முறை.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications