வாக்காளர் பட்டியலில் 'கோல்மால்'-ஊழியர் சஸ்பென்ட்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: வாக்காளர் சேர்க்கையின் போது மனுக்களை ஆய்வு செய்யாமல் அனுப்பிய ஊழியரை தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா சஸ்பென்ட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அப்போது, கும்பகோணம் கோட்டத்தில் 12, 925 மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக தேர்தல் சிறப்பு அலுவலர் சத்தியமூர்த்தி வீடு வீடுடாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கும்பகோணம் தேர்தல் உதவியாளர் சாமிநாதன் 300 மனுக்களை ஆய்வு செய்யாமல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை தமிழக தேர்தல் தலைமை ஆணையாளர் நரேஷ்குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications