திருவண்ணாமலையில் தேர்தலுக்கு கறுப்பு கொடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பகுதியில் இருக்கும் 10 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணமலை மாவட்டத்தில் செய்யாறை அடுத்த மாங்கல் கூட்டுரோடு அருகே சிப்காட் தொழிற்சாலை ஒன்றை மாநில அரசு அமைக்க இருக்கிறது. தற்போது இதற்கான இடங்களை கையகப்படுத்தும் பணிகள் துரிதகமாக நடந்து வருகிறது.
இதற்கு தேவையான் நிலங்களை அதிகாரிகள் அருகில் இருக்கும் மாத்தூர் அழிஞ்சல்பட்டு, பெரிய பெரும்புலிமேடு, சோழவரம், குண்ணவாக்கம் உள்ளிட்ட 10 கிரமாங்களில் இருந்து கையகப்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கறுப்பு கொடி மற்றும் பேனர் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாகவும் இதனால் தேர்தல் அதிகாரிகள் யாரும் இந்த கிராமங்களுக்குள் வர வேண்டாம் என்றும் கூறி அந்த பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து மக்கள் ஒட்டியுள்ளனர். அத்துடன் தேர்தலை புறக்கணிப்பு செய்வதை வெளிகாட்டும் விதமாக வீட்டின் வாசல்களில் கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
இது குறித்து செய்யாறு விவசாய நில பாதுகாப்பு சங்க தலைவர் தமிழினியன் கூறுகையில், இந்த 10 கிராமங்களில் சுமார் 17 ஆயிரம் பேர் இருக்கிறோம். வரும் மே 13ம் தேதி செய்யாறு மண்டல வளர்சசி அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications