ஆங்கிலம்-கம்ப்யூட்டர்களை ஒழிப்போம்!- முலாயம் சிங்கின் தேர்தல் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

Mulyam
டெல்லி: இந்திய அரசியல்வாதிகள் எந்த அளவு தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

அவர் வெளியிட்டுள்ள சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையில், 'பெரும் செலவு பிடிப்பதால் ஆங்கில வழிக் கல்வியை ஒழி்த்துவிடுவதாகவும், மாநிலத்தில் கம்ப்யூட்டர்களை ஒழித்துவிட்டு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரப் போவதாகவும்' அறிவித்துள்ளார்!.

இதைத் தவிர இந்த தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

* விவசாயம் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதத்தில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்குதல்.
* வேலையின்மைக்கு நிரந்தரத் தீர்வாக குடிசை மற்றும் சிறு தொழில்களை அதிகம் ஊக்குவித்தல்.
* இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளை மேம்படுத்துததல், அவற்றின் வளர்ச்சிக்கு அதிகம் செலவிடுதல்
* கண்மூடித்தனமான எந்திரமயமாக்கலை எதிர்த்தல், முடிந்தவரை அனைத்துத் துறைகளிலும் மனித வளத்தையே பயன்படுத்துதல்
* சொத்து வரி அதிகப்படுத்துவதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்தல்
* 4 சதவிகித வட்டியில் விவசாயக் கடன், வறுமையில் வாடி இறந்தவர்களின் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு, இழப்பீட்டுத் தொகை வழங்குதல்
* இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இடையே அரசு சாரா ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கி, எல்லை தாண்டிய ஊடுருவல் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும். அதே நேரம், அண்டை நாடுகளுடன் சுமூக உறவை வளர்த்து தீவிரவாதத்துக்கு எதிராக போராடவும் வேண்டும். காரணம் அண்டை நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தீவிரவாதத்துக்கு காரணங்களாக அமைகின்றன.

நன்றி கெட்ட காங்கிரஸ்...

இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது கங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார் முலாயம்சிங்.

அணு சக்தி ஒப்பந்தம் விஷயத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றிய தங்களிடம் நன்றி கெட்டத் தனமாக நடந்து கொண்டதாகக் குறிப்பிட்டார் முலாயம் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+